28 செப்டம்பர், 2011

எஸ்.ரா., தாகூர் விருது பெற்றமைக்கு பாராட்டு விழா!!!!

மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது.

91 ஆயிரம் ரொக்கப்பணமும், தாகூர் உருவச்சிலையும், பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்.

2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.

யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கிய விருது தமிழுக்கு முதன்முறையாக எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.

அவ்விருது பெற்றமைக்கு சேர்தளம்-திருப்பூர் வலைப்பதிவர் குழுமம்  சார்பில் பாராட்டு விழாவும், வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடலும் திருப்பூரில் 25 செப்டம்பர் 2011 அன்று நடந்தது.


ஓவியர் திரு. வீரப்பன் ஐயா, தானே வரைந்த ஓவியத்தை எஸ்.ராவுக்கு பரிசளித்தார்.

நிகழ்ச்சி குறித்த தினமணி நாளிதழ்ச் செய்தி!



1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக